Financial Assistance to Medicare /மூக்குக் கண்ணாடி பெறுவதற்கான நிதி உதவி














Mohamed Ibrahim Mohammed Rafeek from SNT lane of New Kattankudi -06 said that when he shown his eyes to the doctor due to his vision deficit, the doctor said that to use the specs and Rs.6000/- needs for that and he said that facilities are not available for the day-to-day labor and the doctor's report issued a letter to our company on 02/01/2019.

As per the above letter our organization had provided a cheque amount Rs. 6000/- to buy his requested specs on 07/01/2019.

To be noted that our organization had issued two years ago a cheque amount Rs. 20,000/- for the toilet construction work to above mentioned Mohamed Ibrahim Mohammed Rafeek

புதிய காத்தான்குடி-06 SNT லேனைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹீம் முஹம்மது றபீக் என்பவர் தனது பார்வை குறைபாடு காரணமாக வைத்தியரிடம் காட்டிய போது மூக்குக் கண்ணாடி பாவிக்க வேண்டும் என கூறியதாகவும் அதற்காக ரூபா. 6000/= தேவைப்படுவதாகவும் அதற்குரிய வசதிகள் அன்றாடம் கூலி வேலை செய்யும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்து வைத்தியரின் அறிக்கையுடன் எமது நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை கடந்த 02/01/2019 அன்று வழங்கியிருந்தார். 

மேற்படி கடிதத்திற்கு அமைவாக அவர் கேட்டமூக்குக் கண்ணாடியை வாங்குவதற்காக
அவருக்கு 07/01/2019 திங்கட்கிழமை அன்று ரூபா. 6000/= பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. 

மேற்படி முஹம்மது இப்றாஹீம் முஹம்மது றபீக் என்பவருக்கு இதற்கு முன்னர் அவரது வீட்டு மலசல கூட கட்டிட வேலைக்காக 20,000/= பெறுமதியான காசோலையினைக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரும் எமது நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.