மாபெரும் இரத்ததான நிகழ்வு-2016

















இலங்கை சனநாயக ஷோசலிச குடியரசின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் அகிலத்தின் அருட்கொடை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 5வது வருடமாக இம்முறையும் 06-02-2016 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ M.M.A.மஜீத் (றப்பானீ), அன்னவர்கள் காத்தான்குடி பிரதேச இளைஞர்  சேவைகள் உத்தியோகத்தர், சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வில் 126 ஆண்களும் 53 பெண்களுமாக மொத்தமாக 179 பேர் இரத்ததானம் வழங்கி நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடிக்கடி நிகழும் இரத்த பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சைகளுக்கு ஏற்படும் தடைகளை நீக்கும் நோக்குடன் இவ் திட்டத்தை எமது நிறுவனம் தொடராக நடைமுறைப்படுத்தி வருகின்றது.