2015/2016ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத் திருத்த, தூய குடி நீர் மற்றும் மலசல கூடம், வாழ்வாதாரம், மருத்துவ திட்டங்களில் முதற் கட்டமாக கடந்த 06-02-2016 அன்று 30 பயனாளிகளுக்கு சுமார் 500,000.00 ரூபா நிதி தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.
இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்ட பயனாளிகளின் வீட்டிலுள்ள குறைவேலைகளை இனம்கண்டு அதற்குரிய கட்டிட பொருட்களையும், தொழில் உபகரணங்களாக கோரப்பட்டுள்ள தையல் இயந்திரம் , மா அரைக்கும் இயந்திரம், பண் அரைக்கும் இயந்திரம் போன்ற பொருட்களும், மல சலகூட, தூய குடிநீர் வசதிகளும், மருத்துவத்துக்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்தின் அடுத்த கட்டமாக
மேலும் 50 பயனாளிகளுக்கு இவ்வாண்டு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 50 பயனாளிகளுக்கு இவ்வாண்டு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திட்டங்களுக்காக எம்மால் தெரிவு செய்யப்படுகின்றவர்களில் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், அதிக பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பங்கள், சிறுவர்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் உள்ள ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் ரவூப் மிஸ்பாஹி நாயகம் அன்னவர்கள், பணிப்பாளர் சட்டத்தரணி MIM அஜ்மீர் ஹாஜா நவாஸ், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி திட்டத்தை எமது நிறுவனம் தொடர்ந்து 3 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.