அண்மைக் காலமாக மக்கள் பல்வேறு வகையான நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக அவர்களுடைய குடும்பங்களிலே பிரச்சனைகளும், கஸ்டங்களும் ஏற்படுகின்றது.
இவைகளை எமது நிறுவனம் ஆராய்ந்து அவர்களுக்காக மருத்துவ மற்றும் உள வள ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரபல பெண்நோயியல், மகப்பேறு தொடர்பான வைத்திய நிபுணர் Dr. SHM. நிறாஜ் (VOG) அவர்களைக் கொண்டு கடந்த 26-12-2015 அன்று
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் பள்ளிவாயலில் மகப்பேறு, பெண் நோயியல் தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் பள்ளிவாயலில் மகப்பேறு, பெண் நோயியல் தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அன்னவர்கள் கலந்து கொண்டதோடு சுமார் 300க்கும் அதிகமான தாய்மார்கள், சகோதரிகள் இந் நிகழ்வில் பங்கு பற்றி தங்களது சந்தேகங்களுக்கான தெளிவினையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.