மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் வசிக்கும் 23 வயதான எஸ். அப்துல்லாஹ் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.. மிகவும் வறுமை நிலையிலுள்ள இவரது குடும்பம் இவரது உழைப்பினையே நம்பி இருக்கிறது.
இவ்வாறான சூழலில் இவருடைய மருத்துவ தேவைக்காக எமது அமைப்பிடம் கோரப்பட்ட நிதி உதவியின் பிரகாரம் அவருக்கான நிதி உதவி தொகையாக ரூபா 20000.00 எமது அமைப்பினால்
கடந்த 24-09-2015 அன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் அவருக்காக நிதி உதவியினை வழங்குமாறு சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நலன்விரும்பிகள் பலரிடமும் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 24-09-2015 அன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் அவருக்காக நிதி உதவியினை வழங்குமாறு சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நலன்விரும்பிகள் பலரிடமும் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்ஷா அல்லாஹ் அனைவரும் அவருடைய உடல் ஆரோக்கியத்துக்காகவும், அவருடைய நிதி தேவை நிவர்த்தியாக வேண்டும் என்றும் ஏகனான இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக. (ஆமீன்)