சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தற்போதய மாணவர்களே முக்கியமானவர்கள். அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று நற்பண்புகளுடன் ஓழுக்கமுள்ளவர்களாக வெளிவருகின்ற சந்தர்ப்பத்திலேயே எதிர்கால சமூகமும் அவ்வாறான ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகும்.
எனவேதான் மாணவர்களை கல்வியடன் கூடிய சிறந்த நற்பண்பாளர்களாக உருவாக்கி அவர்களினூடாக எதிர்கால சமூகத்தை மேலும் சிறந்த சமூகமாக கட்டியெழுப்புவதற்காக எமது அமைப்பினால் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்காக கல்வி நிலையம் ஒன்றினை அமைத்து வருகின்றோம். அதனூடாக மாணவர்கள் வந்து சுயமாக
கற்றுக்கொள்ளவும், ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை கற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
கற்றுக்கொள்ளவும், ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை கற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
குறிப்பாக இக்கல்வி நிலையம் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை இனம்கண்டு அவர்களையும் திறமையான மாணவர்களாக உருவாக்குவதும் பாடசாலையை விட்டு இடைவிலகலை தவிர்ப்பதற்காகவும் முக்கிய சில திட்டங்களை வகுத்து எமது செயற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றோம்.