திருமண வைபவத்திற்கான நிதி உதவி












வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்கள் தங்களது குடும்பத்தில் திருமண வைபவங்கள் நடக்கும் போது எமது அமைப்பிடம் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கின்றனர்.

அவ்வாறு அவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கும் போது அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் உறுப்பினர்கள் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கமைய நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த 08-08-2015 அன்று எமது அமைப்பிற்கு கணவனை இழந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றினால் திருமண வைபவத்திற்காக நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள்.

இதற்கான நிதி உதவி 15-08-2016 அன்று எமது அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வாறு இவ் வருடத்திற்குள் (2015) இத் திட்டத்திற்கு மாத்திரம் ரூபா 275000.00 வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.