இன்றைய சூழலில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வாழ்வாதார, கல்விரீதியான முன்னேற்றங்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக பல்வேறு விதமாக
விளக்கமளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இத் திட்டம் 6 மாத கால பகுதியை கொண்டு எமது அமைப்பால் செயற்படுத்தப்படுவதால் இவர்களுக்காக மாதாந்த கருத்தரங்குகளையும், வழிநடத்தல்களையும் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக் கருத்தரங்கு காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.