கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் அதி சங்கைக்குரிய செய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 4வது வருடமாக இம்முறையும் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ். M.I.M. ஜெஸீம் J.P,காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் கௌரவ பொறுப்பதிகாரி திரு ஜயசீலன், காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு
கௌரவ பொறுப்பதிகாரி திரு செல்வராஜா, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மௌலவீ H.M.M. இப்றாஹீம் (நத்வீ),
கௌரவ பொறுப்பதிகாரி திரு செல்வராஜா, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மௌலவீ H.M.M. இப்றாஹீம் (நத்வீ),
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ M.M.A.மஜீத் (றப்பானீ), மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர், தாதியர் ஆகியோருடன் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது 80 ஆண்களும் 50 பெண்களுமாக மொத்தமாக 130 பேர் இரத்ததானம் வழங்கி நிகழ்வை சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடிக்கடி நிகழும் இரத்த பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சைகளுக்கு ஏற்படும் தடைகளை நீக்கும் நோக்குடன் இவ் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.