வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வருடா வருடம் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை முதல் கட்டமாக 50 குடும்பங்களுக்கு 02-02-2015 திங்கட்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பெயின்ட் அடித்தல், தையல், மா இடித்தல், பண் அரைத்தல், பாய் பின்னுதல், போன்ற தொழில்களுக்காக அதன் உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக
மேலும் 50 பயனாளிகளுக்கு இவ்வாண்டு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 50 பயனாளிகளுக்கு இவ்வாண்டு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் உள்ள ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் தவிசாளர் கலாநிதி அல்ஹாஜ் மௌலவீ A.அப்துர் ரவூப் மிஸ்பாஹி நாயகம் அன்னவர்கள், பணிப்பாளர் சட்டத்தரணி MIM அஜ்மீர் ஹாஜா நவாஸ் பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP உட்பட நிருவாக உறுப்பினர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.