பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களையும், தரம் பதினொன்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற மாணவர்களையும், தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் எமது அமைப்பு வருடந்தோரும் கௌரவித்து பராட்டி அவர்களை தொடர்ந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது.
அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2014-06-20 அன்று காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் உள்ள ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் எமது அமைப்பின் கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக இந்திய நாட்டின் றாஜஸ்தான் மாநிலத்தில் இருந்த வருகை தந்த மதிப்புக்குரிய றஊப் ஸாஹிப் அவர்கள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்ததுடன் மேலும் பல அதிதிகளும் கலந்து மாணவர்களை கௌரவப்படுத்தி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
இதன் போது 130 (நூறு) மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.