நடமாடும்
சேவையும்
ஆயுள்வேத
மருத்துவ
முகாமும்.
எமது நிறுவனம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மக்கள்
தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து மேற்படி நிகழ்வினை 22-02-2014 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை காத்தான்குடி-05 மட்/அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு
செய்திருந்தது.
பொது மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்
நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து தமது தேவைகளை இலகுவாக நிவர்த்தி செய்ததோடு
மருத்துவ சேவையினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அப் பகுதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு
காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து
பிரிவினால் நாவற்குடா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்ட
மாணவிகளுக்கான சான்றிதழ்கள்,
கிழக்கு
மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட
குறுந்திரைப்பட போட்டியில் நான்காவது இடத்தை பெற்ற குறுந்திரைப்படத்தில் நடித்த
நடிகர்களுக்கான சான்றிதழ்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,அஷ்-ஷுப்பான் அமைப்பின் நிருவாக முகாமையாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பிரதேச செயலக கிராம சேவை
உத்தியோகத்தர்கள், காத்தான்குடி சமரச சபை
உறுப்பினர்கள், மதகுருமார், றப்பானிய்யஹ் இளைஞர் கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து
சிறப்பித்தனர்.