மாபெரும் இரத்ததான நிகழ்வு – 2014
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின்
புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின்
தவிசாளர் அதி சங்கைக்குரிய செய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை
முன்னிட்டு அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம்
ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 3வது வருடமாக இம்முறையும் 06-02-2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர்
சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்
நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா டாக்டர். மௌலவீ.
அல்ஹாஜ். A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ J.P அன்னவர்கள், காத்தான்குடி
பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ். M.I.M.
ஜெஸீம்.J.P, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மௌலவீ H.M.M. இப்றாஹீம் (நத்வீ),
அல்ஜாமிஅதுர்
றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ M.M.A.மஜீத் (றப்பானீ), தேசிய
இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர், காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள்
உத்தியோகத்தர், சமூக நலன் விரும்பிகள் என
பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் 90 ஆண்களும்
60 பெண்களுமாக மொத்தமாக 150 பேர் இரத்ததானம் வழங்கி நிகழ்வை
சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் அடிக்கடி நிகழும் இரத்த பற்றாக்குறை காரணமாக
சத்திரசிகிச்சைகளுக்கு ஏற்படும் தடைகளை நீக்கும் நோக்குடன் இவ் திட்டம் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றது.