உதவித்தொகை வழங்கும் நிகழ்வு - 2014













வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வருடா வருடம் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை முதல் கட்டமாக 30 குடும்பங்களுக்கு 12-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டது. 

இதன்போது தங்களது வீடுகளின் குறை வேலைகளை பூர்த்தி செய்வதற்காக தலா 15,000 ரூபா படி 20 குடும்பங்களுக்கும் மலசலகூடங்களை அமைப்பதற்காக தலா 10,000 ரூபா படி 05 குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவியாக தலா 10,000 ரூபா படி 03 குடும்பங்களுக்கும் கிணறுகளை அமைப்பதற்காக
தலா 10,000 ரூபா படி 02 குடும்பங்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக மேலும் 50 பயனாளிகளுக்கு இவ்வாண்டு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி அஸ்ஸுப்பான் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் தவிசாளர் கலாநிதி மௌலவீ A.அப்துர் ரவூப் மிஸ்பாஹி அன்னவர்கள், பணிப்பாளர் சட்டத்தரணி MIM.அஜ்மீர் ஹாஜா நவாஸ் உட்பட நிருவாக உறுப்பினர்கள்,உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.