தொண்டர் ஆசிரியர்களுக்கான நிதி உதவி வழங்குதல்

இனம் காணப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் போது அப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றமை வழமையானதாகும். 

அவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு போதிய நிதி அப்பாடசாலையில் இல்லாத சந்தர்பத்தில் அதனை அப்பாடசாலை அதிபர் எமக்கு தெரியப்படுத்துகின்ற போது
எமது அமைப்பு அவ் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை முழமையாகவோ பகுதியலவிலோ வழங்கி வருகின்றது. 

அந்த அடிப்படையில் இறுதியாக காத்தான்குடி ஹஸனாத் பாடசாலையில் தரம் 5 (ஐந்து) புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு எம்மால் பகுதியலவிலான ஊதியம் வழங்கப்பட்டது.