சமாதான கல்வி சுற்றுலா-2013




2013ம் ஆண்டு எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக காத்தான்குடி ஹைறாத் வித்யாலய மாணவர்களையும் ஆரையம்பதி நவரட்ணராசா வித்யாலய மாணவர்களையும் இணைத்து எமது கல்வி அபிவிருத்திக் குழு சமாதான கல்வி சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது. 
இக் கல்வி சுற்றுலாவின் போது கிழக்கு பல்கலைக்கழகம், பொலனறுவை மியுசியம், பராக்கிரமபாகு சமுத்திரம், பாசிக்குடா கடற்கரை மற்றும்
வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல இடங்களையும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இச் சுற்றுலாவின் போது இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டு புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் நடந்து கொண்டமை ஓர் முக்கிய விடயமாகும்.