மாபெரும் கலாசார நிகழ்ச்சி -2013



2013ம் ஆண்டு எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பிரிவாக இம் மாபெரும் கலாசார நிகழ்ச்சி தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு ஆரையம்பதி நந்தகோபண் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM ஜனாப் அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் எமது அமைப்பின் ஆலோசகர் ஜனாப் HMM ஆசிரியர் அமீர் JP, சேவாலங்கா மன்றத்தினுடைய ஐலன்டர் நிலையத்தின்
சமாதான நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மௌலவீ AAM பாஹிம் (றப்பானீ), ஆரையம்பதி சோதி நாதர் குருக்கள், அருட்தந்தை றமேஸ், மௌலவீ ACM பைசல் (றப்பானீ), நவரட்ணராசா வித்தியாலய, ஹைறாத் வித்யாலய அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் மாணவர்களை மகிழ்விக்கும் நோக்கில் மெஜிக் நிகழ்வுகளும் இடம்பெற்றது.