2012ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார
திட்டத்தின் மேற்படி தொழில் உபகரணங்களும்
நிதி உதவியும் வழங்கப்பட்டன.
எமக்கு கிடைத்த
வேண்டுகோள் கடிதத்தின் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் திட்ட
முகாமையாளரோடு ஊக்குவிப்பாளர்களும் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
தையல் இயந்திரம், பாய் பின்னுதலுக்கான உபகரணங்கள், மற்றும் சிறு வியாபாரம் செய்வதற்கான நிதி
என்பன ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப
வழங்கப்பட்டன.
வழங்கிய பொருட்களையும், நிதியையும் அவர்கள் எவ்வாறு பயன்படுத்தகின்றார்கள் என்பதை
எமது ஊக்குவிப்பாளர்கள் கவனித்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வடைவதற்கு
ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றனர்.