இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-2012



எமது அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களை இழந்த, அதிக படிக்கின்ற பிள்ளைகளை கொண்ட குடும்பத்தையுடைய வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையம் வழங்கி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் இம் முறை இந் நிகழ்வு 2012-12-26 ம் திகதி காத்தான்கடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM. அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


இந் நிகழ்வின் போது அஷ்ஷுப்பான் நலன் புரிச் சங்கத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனாப் MHM.. நிப்றாஸ்,பதரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மதிப்பக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் (நத்வீ), காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் ஜே.பி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சிப்லி பாறூக், அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் முகாமையாளர்கள், மற்றும் உலமாக்கள்புத்திஜீவிகள் என பலரும் கலந்து மாணவர்களுக்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.