2012ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார
திட்டத்தின் மேற்படி தொழில் உபகரணங்களும்
நிதி உதவியும் வழங்கப்பட்டன. 2012ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட
வீட்டுத் திட்ட செயற்பாட்டில் 55 பயனாளிகள் பயனடைந்தனர்
இவர்களது வேண்டுகோள் கடிதம்
எமக்கு கிடைக்கப்பெற்றதும் அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் திட்ட
முகாமையாளரோடு ஊக்குவிப்பாளர்களும் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான
உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு தெரிவு
செய்யப்படுகின்றவர்களில் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், அதிக பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பங்கள், சிறுவர்கள் தலைமைதாங்கும்
குடும்பங்கள், மற்றும் விசேட தேவையுடைய
குடும்பங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
தொடர்ந்தும் இத் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.