தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே சமாதானத்தையும்
புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளின்
வழிகாட்டலுக்காகவும் காத்தான்குடி ஆரையம்பதி எல்லை பகுதியிலுள்ள தரம் 5 கல்வி கற்கும் மாணவர்களை இணைத்து அஷ்ஷுப்பான்
நலன்புரிச் சங்கத்தின் கல்வி அபிவிருத்திக் குழு
இலவச பரீட்சை வழிகாட்டல்
கருத்தரங்கு ஒன்றினை காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் 17-07-2012 அன்று ஏற்பாடு
செய்திருந்தது.
இக் கருத்தரங்கில் பிரபல
ஆசிரியர்களான திரு செல்வா, திரு ஜெயா ஆகியோர்
மாணவர்களுக்கு சிறப்பாக தமது ஆலாசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர். இதன்
போது சுமார் 150 மாணவ மாணவிகள் பயன்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.
