தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
மாணவர்களையும் தரம் பதினென்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களையும்
எமது அமைப்பு வருடந்தோரும் கௌரவித்த பராட்டி அவர்கள் தொடர்ந்து கல்வி சார்ந்த
நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது.
அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2012-02-04 அன்று காத்தான்குடி டீன் வீதியில் அமைந்துள்ள மன்பஉள் ஹைறாத் பள்ளிவாயலிள் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக எமது அமைப்பின் தவிசாளர் அதிசங்கைக்குரிய செய்குனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்கள் கலந்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
இதன் போது 100 (நூறு) மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.