எமது அமைப்பின் கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 2011.07.04 அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மன்டபத்தில் மாலை
இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அமைப்பின் வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் மௌலவீ
என்.எம். பஸ்மில் றப்பானீ அவர்கள் நோன்பு மாதத்தின் சிறப்புக்கள் சம்பந்தமாகவும்,
சமூகத்தின் பெண்களின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டும் என்பது
தொடர்பாகவும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இச் சிறப்பு ஒன்று கூடலில் கணவனால்
கைவிடப்பட்டவர்கள், கணவனை
இழந்தவர்கள் மற்றும் யுவதிகள் என சுமார் இருநூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்.